சனி, 31 அக்டோபர், 2009

நல்லோதோர் வீணை செய்தே

நல்லோதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ..!
சொல்லடி சிவசக்தி  - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோ - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே
சொல்லடி சிவசக்தி - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ

விசையுருப் பந்தினைப் போல் - உள்ளம்
வேண்டியபடி செய்யும் உடல் கேட்டேன்
நசையறு மணம் கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன்
தசைனை தீச்சுடினும் - சிவ
சக்தியைப்  பாடும்  நல்லகம்  கேட்டேன்
அசைவறு  மதி கேட்டேன் - இவை
அருள்வதில் உனக்கேதும் தடையுள்ளதோ..! 

2 கருத்துகள்:

பாத்திமா ஜொஹ்ரா சொன்னது…

அருமை

அண்ணாதுரை சொன்னது…

நன்றி பாத்திமா ஜொஹ்ரா அவர்களே..!